Welcome Guest. Sign in or Signup

6 Answers

TNPSC current affairs

Asked by: 312 views ,
Education

6 Answers

 1. 0 Votes Thumb up 0 Votes Thumb down 0 Votes

  தமிழக நிகழ்வுகள்

  கடல் பாதுகாப்பு மற்றும் கடல் ஆய்வு மேம்பாடு குறித்த சர்வதேசப் பயிலரங்கம் சென்னையில் வரும் 6 – ஆம் தேதி முதல் 10 – ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயிலரங்குகள் பள்ளிக்கரணையில் அமைந்துள்ள தேசிய கடல் சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐஓடி) நடைபெற உள்ளன. செய்தி துளிகள்: ‘கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதில் பிராந்தியரீதியில் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள்’ என்ற தலைப்பிலும், ‘ஐ.நா. இலக்கின்படி கடல்சார் அறிவியல் – ஆராய்ச்சி நடவடிக்கையில் நீடித்த வளர்ச்சி’ என்ற தலைப்பிலும் இரு பயிலரங்குகள் நடைபெறவுள்ளன. முதலாவது பயிரலங்கு வரும் 6 மற்றும் 7 – ஆம் தேதிகளில் நடைபெறும். இதற்கு அடுத்த மூன்று நாள்களுக்கு மற்றொரு தலைப்பில் பயிலரங்கு நடைபெறும் என்று என்ஐஓடி இயக்குநர் ஆத்மானந்த் தெரிவித்துள்ளார்.

  தேசிய நிகழ்வுகள்

  மகாராஷ்டிரா அரசு ‘பெண்களுக்கான இணைய பாதுகாப்பு’ (‘Cyber Safe Women’) முயற்சியைத் தொடங்கியுள்ளது, இதன் கீழ் இணைய பாதுகாப்பு குறித்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். சமூக விரோத சக்திகள் மற்றும் குழந்தை வேட்டையாடுபவர்களால் இணைய வலை எவ்வாறு பல்வேறு வகையான குற்றங்களைச் செய்ய பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி பெண்களுக்குக் கற்பிக்க இந்த முயற்சி உதவும். செய்தி துளிகள் மகாராஷ்டிரா முதல்வர்: உத்தவ் தாக்கரே ஆளுநர்: பகத் சிங் கோஷ்யரி தலைநகர்: மும்பை

  senthil Kumar - Jan 05, 2020 |

 2. 0 Votes Thumb up 0 Votes Thumb down 0 Votes

  1) On January 8, 2020, the Central Marine Fisheries Research Institute (CMFRI) announced that it has developed viable scientific method to cultivate Indian Pompano fish in ponds. Pompanos are marine fishes. Cultivating Indian Pompano in ponds will be a good alternative to shrimp. The financial assistance for the scientific invention was provided by the National Fisheries Development Board (NFDB). • Central Marine Fisheries Research Institute Founded: 1947 • Central Marine Fisheries Research Institute Director Dr. A. Gopalakrishnan 2) Gujarat Chief Minister Vijay Rupani announced that the State is to set up the Vikram Sarabhai Children Innovation Center (VSCIC) in the state. The announcement was made at the Children’s Innovation Festival (CIF) held at Gandhinagar. In the Festival he felicitated top 30 idea teams, out 114 teams, led by school students in the state. Also, a letter of intent was exchanged between Gujarat University and UNICEF on the occasion.

  sri mathi - Jan 09, 2020 |

 3. 0 Votes Thumb up 0 Votes Thumb down 0 Votes

  தேசிய நிகழ்வுகள்: குடியுரிமை திருத்தச் சட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) முதல் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக முறைப்படியாக அரசிதழில் அறிவிக்கை ஜனவரி 10 அன்று வெளியிடப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர் இந்தியக் குடியுரிமை பெறலாம். இது ஜனவரி 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. செய்தி துளிகள்: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய அந்நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள் , சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை அளிப்பதே இந்த திருத்தச் சட்டத்தின் நோக்கமாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: செவ்வாய் கிரகம், கணக்கிடப்பட்டதை விட வேகமாக நீரை இழந்து வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் குறித்தும், துணைக்கோள்கள் குறித்தும், துணைக் கோள்கள் குறித்தும் பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாயின் வளிமண்டலத்தில் காணப்படும் நீர் கணக்கிடப்பட்டதை விட வேகமாக மறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, ‘ஜர்னல் சைன்ஸ்’ என்ற இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. செய்தி துளிகள்: அதில், செவ்வாய் கிரகத்தின் ஈhப்பு விசை குறைவாக இருக்கும் காரணத்தினாலேயே ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளுக்கிடையேயான பிணைப்பு எளிதில் முறிந்துவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வளிமண்டலத்தில் அதிக செறிவூட்டப்பட்ட நிலையில் நீர் காணப்படுவதால், சில பருவங்களில் நீர் இழப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐரோப்பிய மற்றும் ரஷிய விண்வெளி ஆய்வு மையங்களின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

  Vasugi s - Jan 11, 2020 |

 4. 0 Votes Thumb up 0 Votes Thumb down 0 Votes

  சர்வதேச நிகழ்வுகள்: தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானா கொரு ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்) ஜிசாட்-30 தகவல்தொழில்நுட்ப செயற்கைக்கோள், திட்டமிட்ட தற்காலிக சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 2020- ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட்-30, பிரான்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஏரியன் 5 விஏ -251 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அதனுடன் பிரான்ஸை சேர்ந்த இடெல்சாட் நிறுவனத்தின் இடெல்சாட் கனெக்ட் செயற்கைக்கோளும் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. செய்தி துளிகள்: இந்த அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள் அதிலுள்ள கே.யு.பேன்ட் அலைவரிசை மூலமாக இந்தியா மற்றும் அதன் தீவுகளுக்கு மட்டுமின்றி வளைகுடா நாடுகள் உள்ளிட்ட ஏராளமான ஆசிய நாடுகளுக்கும் தகவல்தொடர்பு சேவையை வழங்க உள்ளது. மேலும், செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டடிருக்கும் சி-பேன்ட் மூலம் ஆஸ்திரேலியாவுக்கும் தகவல்தொடர்பு சேவையை அளிக்க உள்ளது என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்;துள்ளார். ஜிசாட் – 30 தகவல்தொழில்நுட்ப செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 15 ஆண்டுகளுக்கும் மேலாகும். தேசிய நிகழ்வுகள்: அசாம் உள்நாட்டு நீர் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதற்காக, இந்திய அரசு (Gol), அசாம் அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை 88 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கடன் ஒப்பந்தம் அசாமின் பயணிகள் படகுத் துறையை உள்கட்டமைப்பு மற்றும் அதன் சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் நவீனமயமாக்க முயல்கிறது. அரசாங்க படகுகள் அசாம் ஷிப்பிங் நிறுவனத்தால் (Assam Shipping Company (ASC)) இயக்கப்படுகின்றன. டெர்மினல்கள் மற்றும் முனைய சேவைகள் அசாம் மாநிலத்தில் உள்ள அசாம் துறைமுக நிறுவனம்(Assam Ports Company (APC)) வழங்குகின்றன. செய்தி துளிகள்: புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (International Bank for Reconstruction and Development (IBRD)) அசாம் உள்நாட்டு நீர் போக்குவரத்து திட்டத்தின் நவீனமயமாக்கலுக்காக 88 மில்லியன் கடன் தொகையை வழங்கும். கடனின் இறுதி முதிர்வு5 ஆண்டுகள், 5 ஆண்டுகால அவகாசம்.

  Vasugi s - Jan 18, 2020 |

 5. 0 Votes Thumb up 0 Votes Thumb down 0 Votes

  1. கடல் பாதுகாப்பு மற்றும் கடல் ஆய்வு மேம்பாடு குறித்த சர்வதேசப் பயிலரங்கம் சென்னையில் வரும் 6 – ஆம் தேதி முதல் 10 – ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயிலரங்குகள் பள்ளிக்கரணையில் அமைந்துள்ள தேசிய கடல் சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐஓடி) நடைபெற உள்ளன. 2. தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானா கொரு ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்) ஜிசாட்-30 தகவல்தொழில்நுட்ப செயற்கைக்கோள், திட்டமிட்ட தற்காலிக சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 2020- ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட்-30, பிரான்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஏரியன் 5 விஏ -251 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அதனுடன் பிரான்ஸை சேர்ந்த இடெல்சாட் நிறுவனத்தின் இடெல்சாட் கனெக்ட் செயற்கைக்கோளும் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானா கொரு ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்) ஜிசாட்-30 தகவல்தொழில்நுட்ப செயற்கைக்கோள், திட்டமிட்ட தற்காலிக சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 3. 2020- ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட்-30, பிரான்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஏரியன் 5 விஏ -251 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அதனுடன் பிரான்ஸை சேர்ந்த இடெல்சாட் நிறுவனத்தின் இடெல்சாட் கனெக்ட் செயற்கைக்கோளும் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

  Rajesh kan - Jan 23, 2020 |

 6. 0 Votes Thumb up 0 Votes Thumb down 0 Votes

  tnpsc online coaching

  Ganesh Ram - Sep 23, 2020 |


Answer Question